பூதப்பாண்டி அருகே 800 கிராம் கஞ்சாவுடன் 3 பேர் சிக்கினர்
- இந்த ஆண்டு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- கஞ்சா செடி எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வரு கிறார்கள்.
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.நேற்றும் கோட்டார், வடசேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பூதப் பாண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்ப டும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள் மூன்று பேரை பிடித்தனர்.
பிடிபட்ட வாலிபர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய் தனர். மேலும் கஞ்சா செடி வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
பிடிபட்ட 3 பேரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கஞ்சா செடி எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.