உள்ளூர் செய்திகள் (District)

நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6½ கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2022-08-22 10:11 GMT   |   Update On 2022-08-22 10:11 GMT
  • வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா கொண்டுவரப்பட்டு குமரி மாவட்டத்தில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
  • ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி உள்ளனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் கஞ்சாக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா கொண்டுவரப்பட்டு குமரி மாவட்டத்தில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இதனால் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். டெல்லியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று அதிகாலை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் அனாதையாக பேக் கிடந்தது. அந்த பேக்கை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மூன்று பொட்டலங்கள் இருந்தது.

அவற்றை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரிய வந்தது.பேக்கிலிருந்த 6 கிலோ 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2 வாரத்துக்கு முன்புதான் குமரி மாவட்டத் திற்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News