குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 69 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைந்துள்ளனர் - கலெக்டர் அரவிந்த் தகவல்
- வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்
- மரணம் அடைந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அவற்றை நீக்க சிறப்பு முகாம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்து திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திருத்தம் செய்ய வேண்டியவரின் உறவினர்களே முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தத்தை செய்யலாம். மரணம் அடைந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அவற்றை நீக்க சிறப்பு முகாம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர் பட்டிய லில் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 69 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மீதம் உள்ளவர்களின் ஆதார் எண்ணையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே முகாமில் பங்கேற்கும் பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.