உள்ளூர் செய்திகள்

ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் காயம் அடைந்த 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

Published On 2023-05-13 07:04 GMT   |   Update On 2023-05-13 07:04 GMT
  • பலியான கார் டிரைவர் மீது வழக்கு
  • டாக்டர்கள் 24 மணி நேரமும் காயமடைந்தவர்களை கண்காணித்து வருகிறார்கள்.

நாகர்கோவில் :

குமரி மேற்கு மாவட்டம் பகுதியைச் சேர்ந்த இளை ஞர்கள் 9 பேரும் கேரள மாநிலம் நெய் யாற்றின் கரையை சேர்ந்த தாய், மகள்கள் என 3 பேரும் திருச்செந்தூரில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக காரில் நேற்று முன்தினம் சென்றனர்.

நேற்று காலை நிகழ்ச்சி முடிந்து திருச்செந்தூரில் இருந்து ஊருக்கு புறப்பட்டனர். காரை திருவிதாங் கோட்டை சேர்ந்த சதீஷ் (வயது 37) ஓட்டினார். நாகர்கோவில் அருகே லாயம் பகுதியில் கார் வந்த போது சதீஷின் கட்டுப் பாட்டை இழந்து நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேராக மோதியது.

இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி னார்கள். டிரைவர் சதீஷ் மற்றும் அருமனையை சேர்ந்த கண்ணன், திருவரம்பைச் சேர்ந்த அஜித் (22), அபிஷேக் (22) ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். நெய்யாற்றின் கரையை சேர்ந்த அனந்திகா, அவரது தாயார் அஜிதா, சகோதரி அனாமிகா, சிதறாலை சேர்ந்த அஸ்வந்த் (18), திருவட்டாரைச் சேர்ந்த சஜின், திருவரம்பை சேர்ந்த நிதிஷ் மற்றும் அவரது சகோதரர் நிஷாந்த், மார்த் தாண்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், ஆரல்வாய்மொழியை சேர்ந்த எட்வின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 9 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த தும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடன கலைஞர்கள் 4 பேர் பலியானது பற்றிய தகவல் அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர்.

அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், எம். ஆர். காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தி னார்கள்.

படுகாயம் அடைந்த 9 பேரில் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 8 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகி றார்கள். இதில் திருவரம்பை சேர்ந்த நிதிசுக்கு வெண்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் 24 மணி நேரமும் காயமடைந்தவர்களை கண்காணித்து வருகிறார்கள்.

விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் வைராக் குயிருப்பை சேர்ந்த இம்மானுவேல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி டாடா சுமோ கார் டிரைவர் திருவி தாங்கோட்டை சேர்ந்த சதீஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட சதீஷ் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பலியான 4 பேரின் உடல் களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவி னர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. கண்ணன், சதீஷ், அபிஷேக்கின் உடலை உறவினர்கள் நேற்று பெற்று சென்றனர். அஜித்தின் உடல் இன்று உறவி னர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்த னர். விபத்து குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த பகுதி வளைவான பகுதி என்பதும் கார் வேகமாக வந்து திரும்பிய போது கட்டுப் பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி யதும் தெரிய வந்துள்ளது. கார் வேகமாக வருவதை பார்த்த அரசு பஸ் டிரைவர் பஸ்ஸின் வேகத்தை குறைத் துள்ளார். இல்லாவிட்டால் மேலும் உயிரிழப்பு அதிக ரித்திருக்கும் என்றும் தெரி வித்தனர்.

இதற்கிடையில் பலியா னவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News