கோட்டாரில் இன்று காலை அதிக பாரம் ஏற்றி வந்த 9 டாரஸ் லாரிகள் பறிமுதல்
- அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
- லாரியில் அதிக பாரத்துடன் ஜல்லி ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் தினமும் போலீசாரும் ,அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
நேற்று காலையில் தக்கலை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 டாரஸ் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். களியக்காவிளை பகுதியில் 4 லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டது.
நேற்று ஒரே நாளில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலமாக ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
இன்று காலையிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோ வில் நகர் பகுதியில் நடத்தப் பட்ட சோதனையின் போது அந்த வழியாக வந்த லாரி களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். கோட்டார் பகுதியில் நடந்த சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 9 டாரஸ் லாரிகள் சிக்கியது. பிடிபட்ட லாரிகளை கோட்டார் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். அந்த லாரிகள் அனைத்தும் கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. பிடிபட்ட லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
விளவங்கோடு தாலுகா தனி வட்டாட்சியர் தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அதிகாரம் ஏற்றி சென்ற கனக லாரியை மடக்கி சோதனை செய்தனர், லாரியில் அதிக பாரத்துடன் ஜல்லி ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். மேலும் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர், அதேபோல அதிக பாரம் ஏற்றிச் சென்ற மற்றொரு கனக கனரக லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை பெற்று வருகிறது.