உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட ராட்சத மலைப்பாம்பை படத்தில் காணலாம் 

கன்னியாகுமரி அருகே தென்னந் தோப்புக்குள் புகுந்து வலையில் சிக்கிய 10 அடி நீள ராட்சத மலைபாம்பு

Published On 2022-10-07 11:34 GMT   |   Update On 2022-10-07 11:34 GMT
  • வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
  • அந்த மலைப்பாம்பு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கிய புரத்தில் தென்னந் தோப்புக்குள் ராட்சத மலைப் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த ராட்சத மலைப்பாம்பு அங்கு விரித்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த மலைப்பாம்பு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற அந்த பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர் அதனை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் வனக்காவலர் ஜோயல், வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

அந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News