அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது
- கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
- கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது
நாகர்கோவில் : கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச உரிமைகள் கழக தலைவரும் சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான அசோக்குமார் தலைமை தாங்குகிறார். எம்.செந்தில் குமார், தினேஷ் குமார், சந்திர செல்வம், நாகேந்திரன், பி. செந்தில் குமார், சிவா, செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ் வரவேற்று பேசுகிறார்.
சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பச்சைமால், சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் தாஸ், ரமேஷ் , நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி.செந்தில்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நஜிமுதீன், ஸ்டாலின், கிங்ஸ்லி ஜெரால்டு , ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.