கன்னியாகுமரி அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு
- தீயணைக்கும் படை வீரர்கள் போராடி மீட்டனர்
- பசு மாட்டை அதன் உரிமையாளரிடம் தீயணைக்கும் படை வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள அழகப்பபுரத்தை அடுத்துள்ள ஜேம்ஸ்டவுணை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று காலையில் அந்த பகுதியில் மேய்ச்ச லுக்காக வீட்டில் இருந்து வெளியில் அவிழ்த்து விடப் பட்டு இருந்தது.
அதன்பிறகு அந்த பசு மாடு நேற்று மாலை வரை வீடு திரும்ப வில்லை. இ தனால் அந்தோணி ராஜ் பசுமாட்டை தேடி மேய்ச்சல் நிலத்துக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள 50 அடி ஆழ தண்ணீர் இல்லாமல் சேறும் சகதியு மாக இருந்த பாழடைந்த கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து சகதியில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டி ருந்ததை பார்த் தார். உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மழையிலும் விடாது போராடி ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் உயிருடன் மீட்டனர். அதன்பிறகு அந்த பசு மாட்டை அதன் உரிமையாளரிடம் தீயணைக்கும் படை வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.