உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நாய் உயிருடன் மீட்பு
- தீயணைக்கும் படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை
- அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாஸ். கூலி தொழிலாளி. இவரது வீட்டு நாய் தெற்கு குண்டல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள 40 அடி ஆழ பஞ்சாயத்து கிணற்றில் தவறி விழுந்தது. அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த நாயை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நாயை தீயணைக்கும் படை வீரர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.