உள்ளூர் செய்திகள்
இரணியல் சந்திப்பில் மதுபோதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
- சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்றது.
- 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சொகுசு கார் பறிமுதல்
கன்னியாகுமரி :
குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் நேற்று இரணியல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தின் பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்றது.
அதனை நிறுத்தி சோதனை செய்தபோது காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவரது பெயர் இர்வின்பால் (வயது 25) என்பதும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போக்கு வரத்து போலீசார் நட வடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.