மார்த்தாண்டம் அருகே வீட்டில் தீ விபத்து
- புகை வந்ததை பார்த்தபோது சமையலறை முழுவதும் தீபற்றி எரிந்து கொண்டிருந்தது
- அடுப்பிலிருந்து தீ கனல் காற்றில் பரவி தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம்
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி, இவரது மனைவி சாரதா வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது சமையலறையிலிருந்து புகை வந்ததை பார்த்தபோது சமையலறை முழுவதும் தீபற்றி எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து சாரதா குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த குழித்துறை தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை தண்ணீர் மூலம் விரைந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் சமையலறை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதனால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மின்சார பொருட்கள், எரிந்த சேதமடைந்தது. எனினும் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. இதேபோல் தீ விபத்து ஏற்பட்ட சமையலறை பகுதியில் எரிவாயு சிலிண்டர் இருந்த நிலையில் தீயணைப்பு துறையினர் அதை விரைந்து அகற்றியதால் அப்பகுதியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அடுப்பிலிருந்து தீ கனல் காற்றில் பரவி தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மக்கள் நடமாட்டம் அதிகமான மார்த்தாண்டம் பகுதியில் வீட்டின் சமையலறை யில் தீவிபத்து ஏற்பட் டது. அப்பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியது.