களியக்காவிளையில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்
- 2 பேர் படுகாயம் அடைந்தனர்
- களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.
இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.