உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே லோன் வாங்கித் தருவதாக பணம் பறிக்க முயன்ற கேரள வாலிபர்

Published On 2022-08-17 09:47 GMT   |   Update On 2022-08-17 09:47 GMT
  • தட்டிக் கேட்டவரை கத்தியால் குத்தினார்
  • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜோயல் சிங். இவரது வீட்டின் அருகில் வயதான தம்பதியர் வசித்து வருகின்றனர்.

நேற்று அந்த தம்பதியர் வீட்டுக்கு இரு சக்கர வாகன த்தில் மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் முதிய தம்ப தியரிடம் லோன் வாங்கி தரு வதாக கூறி உள்ளார்.மேலும் அதற்கு முதலில் முன் பணம் கட்ட வேண்டும் என்றும் அந்த நபர் கூறி உள்ளார்.

ஆனால் முதிய தம்பதி யினர் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனால் அந்த நபர் முதிய தம்பதியிடம் பணம் பறிக்க முயன்று உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்ச லிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாலிபர் அங்கி ருந்து ஒட்டம் பிடித்தார்.

இதற்கிடையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜோயல் சிங் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ரசல் ராஜ் ஆலய பங்கு தந்தை உள்ளிட்டோர் வாலிபரை துரத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோயல் சிங்கை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

படுகாயம் அடைந்த ஜோயல் சிங் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளையும் கைப்பற்றி பார்த்தனர்.

இதில் தப்பி ஒடிய வாலிபர் கேரள மாநிலம் காஞ்சிராங்குளம் பகுதியை சேர்ந்த சிபு நாயர் என தெரிய வந்தது. அவர் மீது கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News