தோவாளையில் ஒரு கிலோ பிச்சி - மல்லிகை ரூ.1000-க்கு விற்பனை
- பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200, கிரேந்தி ரூ.50, கனகாம்பரம் ரூ.400,
ஆரல்வாய்மொழி :
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூ சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, குமாரபுரம், புதியம்புத்தூர், ஆவரைகுளம், ராதாபுரம் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூ, மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, சங்கரன்கோவில், ராஜ பாளையம், கோவில்பட்டி ஆகிய இடத்தில் இருந்து மல்லிகை பூவும், திருக் கண்ணங்குடி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரோந்தி, பட்டர் ரோசும், சேலத்தில் இருந்து அரளி பூவும், தோவாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சம்பங்கி பூ, ரோஸ் கோழி கொண்டை அருகம்புல், தாழம்பூ ஆகியவைகள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தோவாளை சந்தையில் ஒரு கிலோ பிச்சி பூ மற்றும் மல்லிகை பூ கிலோ ரூ.1000-க்கும் இன்று விற்பனையானது. அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200, கிரேந்தி ரூ.50, கனகாம்பரம் ரூ.400, துளசி ரூ.30, பச்சை ரூ.7 எனவும், மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.