கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்
- 40 வயது மதிக்கத்தக்க அவர் சிவப்பு நிற சட்டையும், சந்தனகலர் பேண்டும் அணிந்து இருந்தார்
- வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின் புறம் உள்ள கடலில் இன்று (புதன்கிழமை) காலை ஆண் உடல் மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடலில் மிதந்த உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் சிவப்பு நிற சட்டையும், சந்தனகலர் பேண்டும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி மூழ்கி இறந்தாரா? என்பது தெரியவில்லை.
இதற்கிடையில் அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து உடலை கடலில் வீசியிருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீ சா ருக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கன்னியா குமரிக்கு வந்த வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.