உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று காலை கொரியர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

Published On 2022-07-11 07:20 GMT   |   Update On 2022-07-11 07:20 GMT
  • காலை 8.30 மணிக்கு கொரியர் நிறுவனத்தை திறந்த போது அங்கியிருந்து புகை வந்தது
  • பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நாகர்கோவில் :

நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் தனியார் கொரியர் நிறுவனம் உள்ளது.

இந்த கொரியர் நிறுவனத்தின் மேலாளராக நாகர்கோவில் கலை நகரை சேர்ந்த தனேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலையில் 7 மணிக்கு வழக்கம் போல் கொரியர் நிறுவனத்தை தனேஷ் திறந்து உள்ளார்.

கொரியர் நிறுவனத்தில் வெளியூரில் இருந்து வந்த ஏராளமான பொருட்கள் இருந்தது. மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கு அனுப்ப பொருட்களும் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது.

தனேஷ் சிறிது நேரம் கொரியர் நிறுவனத்தை திறந்து வைத்துவிட்டு மீண்டும் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை 8.30 மணிக்கு கொரியர் நிறுவனத்தை திறந்த போது அங்கியிருந்து புகை வந்தது.

அங்கிருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருந்தன, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொரியர் நிறுவனத்தில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் கொரியர் நிறுவனத்தில் இருந்த பொருட்களை அனைத்தும் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கொரியர் நிறுவனம் முன்பு திரண்டு இருந்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர்.

முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொரியர் நிறுவனத்தில் வேறு ஊர்களுக்கு அனுப்ப வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News