வடசேரியில் நண்பரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி
- ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை
நாகர்கோவில்:
குருந்தன்கோடு ஆசாரிவிளை கொல்ல மாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மகன் ராஜன், கட்டிட தொழிலாளி.
இவரது வீட்டில் கடந்த மாதம் ரூ.47 ஆயிரம், 2 கிராம் தங்கம் திருட்டு ேபானது. இது குறித்து இரணியல் போலீசில் அவர் புகார் செய்தார். அதில் தனது நண்பரான ஆசாரிபள்ளம் பெருவிளையைச் சேர்ந்த செல்வமணி மகன் ராஜன் மற்றும் அவரது நண்பர் தான் நகை-பணத்தை எடுத்துச் சென்றதாக கூறியி ருந்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரு விளையில் உள்ள ராஜன் வீட்டிற்கு வந்த, கட்டிட தொழிலாளி ராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் பள்ளிவிளையில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராஜன் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார்.மேலும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கட்டிட தொழிலாளி ராஜனை தலை மற்றும் உடல் பகுதியில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
படுகாயம் அடைந்த ராஜன் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார், இன்ஸ்பெக்டர் திருமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வமணி மகன் ராஜனை தேடி வரு கின்றனர்.