உள்ளூர் செய்திகள்

வேலை பார்த்த கடையில் பணத்தை திருடிய இளம்பெண்

Published On 2023-07-13 06:53 GMT   |   Update On 2023-07-13 06:53 GMT
  • போலீசார் விசாரித்து விடுவித்த நிலையில் ‘திடீர்’ மாயம்
  • நாகரில் பணிக்கு சேர்ந்த 4-வது நாளிலேேய கைவரிசை

நாகர்கோவில் :

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் அந்த கடையில் இருந்த ரூ.42 ஆயிரத்தை காணவில்லை.

இதையடுத்து கடை உரிமையாளர் பணத்தை தேடினார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடையில் வேலை பார்த்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இளம் பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய பணத்தில் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கிய தாகவும், மீதி பணத்தை பேக்கில் வைத்து இருப்பதாக வும் கூறினார்.

இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்த னர். அவரது பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். நடந்த சம்பவத்தை போலீசார் இளம்பெண்ணின் பெற்றோரிடம் கூறினார்கள். இளம்பெண்ணிடம் இருந்த பணத்தை கடை உரிமையா ளரிடம் போலீசார் வாங்கி ஒப்படைத்தனர். மீதி பணத்தை ஒப்படைக்க சிறிது கால அவகாசம் கேட்டனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற அந்த இளம்பெண் அழுது கொண்டே இருந்தார். பின்னர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். வீட்டில் இருந்தவர்கள் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடினார்கள். அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர் கோட்டார் போலீசில் மகள் மாயமானது குறித்து புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கடையில் திருடிய விஷயம் வெளி நபர்களுக்கு தெரிந்ததால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் இதனால் வீட்டில் இருந்து அவர் சென்று இருக்கலாம் என்றும் தெரிகிறது.

மாயமான இளம் பெண்ணின் செல்போன் டவர் உதவியுடன் அவரை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News