உள்ளூர் செய்திகள்
வர்த்தக நிறுவனங்களில் பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கினால் நடவடிக்கை
- தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
- குறைவான ஊதியம் வழங்கினால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை
நாகர்கோவில் :
நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:-
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ள சென்னை முதன்ைம செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஸ்கேன் சென்டர் மற்றும் பரிசோதனை நிலையங்கள், கால் சென்டர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பணியாளர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கும் குறைவான ஊதியம் வழங்கினால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.