தேங்காப்பட்டணம் துறைமுக முகத்துவாரம் பகுதியை ராட்சத எந்திரத்தால் ஆழப்படுத்த நடவடிக்கை
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
- தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடியும், நபார்டு ரூ.60 கோடி, தமிழக அரசு ரூ.43 கோடி ஒதுக்கீடு
நாகர்கோவில்:
தேங்காப்பட்டணம் துறைமுக மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆலோசனை மேற் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் தேங்காப்பட் டணம் துறைமுகம் மேம் பாட்டு பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதி கள் உள்ளிட்டோர்களுட னான கலந்தாய்வுக்கூட் டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் தொழில்நுட்ப காரணங்க ளால், முகத்துவாரப் பகு திகளில் பல உயிரிழப்பு கள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து தேங்காப்பட்ட ணம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசித்துவரும் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் மாவட்ட நிர்வா கத்திற்கு உயிரிழப்பு கள் ஏற்படுவதை தடுப்பதற் கான மேல்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மீன்பி டித்துறைமுக முகத்துவா ரத்தை ராட்சத இயந்திரம் கொண்டு ஆழப்படுத்துவற் கான நடவடிக்கை விரை வில்மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துணை இயக்குநர் (மீன்வளத்துறை) காசி விஸ்வநாத பாண்டியன், கலெக்டரின் நேர்முக உத வியாளர் (பொது) வீரா சாமி, ஊசூர் மேலாளர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர்கள், மீனவ பிரதிநிதிகள் ஜார்ஜ் ராபின்சன், ஜோர்தான், பினுலால்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், 'தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகதிட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடியும், நபார்டு ரூ.60 கோடி. தமி ழக அரசு ரூ.43 கோடி ஒதுக் கீடு செய்து ஒரு வாரத் தில் இதற்காக அரசாணை வெளியிட உள்ளது.
துறைமுக முகதுவா ரத்தில் மணல் அள்ளும் பணிக்கு புனேயில் இருந்து இயந்திரம் ரூ.31.18 கோடியில் வர உள்ளது. செப்டம்பர் 20-ந் தேதிக்கு பிறகு மண் அள் ளும் பணி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் கள். அவ்வாறு தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.