கன்னியாகுமரி-திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலைக்கு கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு
- 64 புதிய பாலங்களும் கட்டப்படுகின்றன
- நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.ஆயிரத்து 600 கோடி செலவானது
நாகர்கோவில் :
நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலை இரு வழிச்சாலையாக உள்ளது . இந்த சாலையில் தினமும் ஆறு வழி பாதையில் செல் லும் அளவிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. விபத்துகளும் நடந்து வருகின்றன.
இதையடுத்து கன்னியா குமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.2 ஆயிரத்து 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.ஆயிரத்து 600 கோடி செலவானது. மீதமுள்ள 500 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டது. குழித்துறையில் மிகப்பெரிய பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும், நாகர்கோவில் அருகே ரெயில்வே பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டாலும் அந்த பாலத்தின் இரு புறமும் மணல்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்த பகுதியில் மணல்கள் நிரப்பப்படாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொற்றையடியில் இருந்து புத்தேரி குளத்தின் கரை வரை உள்ள 4 வழி சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பாலப்பணி முற்றிலும் முடிவடையும் பட்சத்தில் இந்த வழியாக வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். எனவே இந்த பாலத்தின் இருபுறமும் மணல்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வழியாக வாகனங்கள் சென்றால் நாகர்கோவில் நகரில் போக்கு வரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. அப்டா மார்க்கெட் மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் வாகனங்கள் கன்னியாகுமரியில் இருந்து இந்த புறவழிச்சாலை வழியாக சென்று விடலாம். தற்பொழுது இந்த சாலை பணியை பொருத்த மட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. மீண்டும் இந்த பணியை தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து குளத்தின் மேல் பாலம் அமைக்கும் பணி உட்பட பல்வேறு இடங்களில் ராட்சத பாலங்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக புத்தேரி குளத்தில் மிகப்பெரிய பாலம் அமைக்கப்படுகிறது. 450 மீட்டர் நீளத்திற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்படுகிறது.
இதே போல் தோட்டியோடு பகுதியில் 325 மீட்டர் நீளத்திற்கும் பொற்றையடி பகுதியில் 50 மீட்டர் நீளத்திற்கும் குளத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. வழுக்கம் பாறை பகுதியில் 4 வழிச்சா லையின் மேல் மேம்பாலம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொ ழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 இடங்களில் பெரிய பாலமும், 16 இடங் களில் சிறிய பாலமும், அதைவிட சிறிய பாலங்கள் என மொத்தம் 64 பாலங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. 4 வழிச்சாலை பணியை 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த 4 வழிச்சாலை குமரி மாவட்டத்தின் முதுகெலும் பாக விளங்கும். போக்கு வரத்து நெருக்கடியும் குறையும். இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. குளங்களில் மணல் நிரப்பாமல் இருக்கும் வகையில் பல்வேறு இடங்களில் குளத்தின் நடுவே பாலம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். பாலம் அமைக்கப்படும்போது குளத்தின் இருபுறமும் மணல்கள் நிரப்பிவிட்டு நடுவே பாலங்கள் அமைக்கப்படும்.
அதன் பிறகு அந்த மணல்கள் அகற்றப்படும். மணல் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்பொழுது பக்கத்து மாவட்டங்களில் இருந்து மணல் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. பணிகளை இந்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். பணிகள் தொடங்கப்படும் போது முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படும். 2 ஆண்டுகளுக்குள் பணி நிறைவு பெறும் என்றார்.