போர் விமானத்தை விமானப்படை அதிகாரிகள் ஆய்வு
- நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் உள்ளது
- போர் விமானம் நல்ல நிலையத்தில் உள்ளதால் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் வேப்ப மூடு பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் செல்பி பாயிண்ட் அமைக் கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். பூங்காவிற்குள் பாகிஸ்தான் போரில் கடந்த 1971-ம் ஆண்டு ஈடுபட்ட மேக் 21 ரக போர் விமானம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த போர் விமானமானது கடந்த 2014-ம் ஆண்டு விமானப் படையால் வழங்கப்பட்டது.
தற்பொழுது இந்த விமானம் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரம் விமா னப்படை தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் பிஜு, அபினவ் ஆகியோர் கொண்ட குழுவினர் மாநக ராட்சி அலுவல கத்திற்கு வந்தனர். மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிர மணியனுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் வைக்கப் பட்டுள்ள விமானத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:-
போர் விமானத்தை நல்ல நிலையில் மாநகராட்சி பராமரித்து வருகிறது. போர் விமானத்தில் பொதுமக்கள் தங்களது பெயர்களை எழுதி வைத்துள்ளனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற போர் விமானத்தில் பெயர்களை எழுதாமல் இருக்க எச்சரிக்கை பலகை மாநகராட்சி சார்பில் வைக்க வேண்டும். விமானத்தின் உற்பத்தி, அது என்ன என்ன சேவை செய்துள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் எழுதி அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்.
விமானத்தின் இரு புறங்களில் உள்ள மரக்கி ளைகளை அகற்ற வேண்டும். இதனால் விமானத்தின் மீது மரக்கிளைகள் முறிந்து விழுவதை தவிர்க்கலாம். மேலும் போர் விமானம் நல்ல நிலையத்தில் உள்ளதால் அந்த விமானத்திற்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.