உள்ளூர் செய்திகள்

அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

Published On 2023-10-29 07:20 GMT   |   Update On 2023-10-29 07:20 GMT
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பல்வேறு அரசுத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி னார். சிறப்பு திட்ட செய லாக்கத்துறை செயலர் தாரேஸ் அகமது, மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதா வது:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டங்கள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப் பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல் படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவை யான நிதிகள் ஆகியவை குறித்தும் தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும் அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு நல்கி, மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனை வரின் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள் கிறேன்.

மேலும், பள்ளிகளில் உடற்கல்வி பாடப்பிரிவு நேரத்தில் பிற பாடங்களை கற்பிக்க அனுமதி அளிக்கா மல் மாணவர்களை விளை யாட அனுமதி அளிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் துணை தேர்விற்கு விண் ணப்பிக்கும் சதவிகி தத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவத் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தனிக்கவ னம் எடுத்து தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண் டும். அனைத்து சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தி லும் இ-சேவை மையம் அமைத்து தொடர்ச்சியாக செயல்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமின் எண்ணிக்கையை கூடுதலாக நடத்த நடவடிக்கை எடுத்து அதன்மூலம் தனியார் துறையில் வேலை நாடுநர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அங்கன் வாடி உட்கட்டமைப்பை சமூக பொறுப்பு நிதி உள்ளிட்ட பிற நிதிகளின் மூலம் மேம்படுத்த வேண்டும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று பிற மாவட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவி யர்களை கண்டறிந்து புதுமை பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பயன்பெற செய்ய வேண் டும்.செயல்படாமல் உள்ள உழவர் சந்தைகளை செயல் படுத்தவும், செயல்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சான்று அளிக்கப்பட்ட விதைகள் வழங்குதல் மற்றும் அங்கக விவசாய பரப்பினை அதிகரிக்க செய்ய வேண்டும். சான்று அளிக்கப்பட்ட நெல் விதைகளின் அளவு குறித்து விவசாயிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த

வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனம், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, நாகர்கோவில் மாந கராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வரு வாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் உள்பட அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News