உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று 5 மாடி வணிக வளாக கட்டிடத்தில் லிப்ட்டில் சிக்கிய ஊழியர்

Published On 2023-09-01 07:38 GMT   |   Update On 2023-09-01 07:38 GMT
  • தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்
  • லிப்ட்டுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகர்கோவில், செப்.1-

நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் 5 மாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வங்கி, கம்ப்யூட்டர் சென்டர், இன்சூரன்ஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு ஏராளமான பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வணிக வளாகத்தில் உள்ள லிப்ட்டை பயன்படுத்துவது வழக்கம். இன்று காலையில் வேலைக்கு வந்த பணியாளர்கள் லிப்ட்டை பயன்படுத்தினார்கள். அதன்பிறகு லிப்ட் ஊழியர் ஜான்சன் (வயது 60) என்பவர் மேல் மாடி யிலிருந்து தரைதளத்திற்கு லிப்ட்டில் வந்து கொண்டி ருந்தார். அப்போது முதல் தளத்திற்கும், தரைத்தளத்திற்கும் இடை யில் வந்தபோது லிப்ட் பாதியில் நின்றது. இதையடுத்து அவர் தொடர்ந்து லிப்ட் இயக்க முயன்றார்.

ஆனால் லிப்ட்டை இயக்க முடியவில்லை. இதையடுத்து லிப்ட் பழுதானது குறித்து ஆப்ரேட்டர் ஜான்சன் மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கி இருந்த ஜான்சனை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். 5-வது மாடிக்கு சென்று லிப்ட்டை தரை தளத்திற்கு கொண்டு வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

சுமார் 45 நிமிடம் போராடி லிப்ட் தரை தளத்திற்கு கொண்டு வந்த னர். பின்னர் லிப்ட்டின் கம்பிகளை வெட்டி அங்கிருந்த ஜான்சனை மீட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஜான்சன் மீட்கப்பட்டார். ஜான்சன் லிப்ட் ஆப்ரேட்டர் என்பதால் அவர் எந்த ஒரு தயக்கமும் இன்றி இருந்தார். இருப்பினும் மீட்கப்பட்ட ஜான்சனுக்கு முதல் உதவி சிகிச்சைகளை அளித்தனர். ஏற்கனவே இந்த வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு லிப்ட் ஒன்று பழுதாகி அதில் சிக்கிய பொதுமக்கள் மீட்கப்பட்ட னர் என்பது குறிப்பிடத்தக்க தாகும். மேலும் நாகர்கோ வில் நகரில் கடந்த சில நாட்களாகவே திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் உள்ள லிப்ட்டுகளில் பொதுமக்கள் சிக்கி மீட்கப்படும் சம்ப வங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. எனவே வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபங்களில் உள்ள லிப்ட்டுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

Tags:    

Similar News