ஐப்பசி பவுர்ணமியையொட்டி குகநாதீஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம்
- 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடந்தது
- 12 அலங்கார சோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார். இங்கு குகன் என்ற முருகக் கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்ட தால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று.
இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் அமைந்து உள்ள சிவலிங்கம், குமரி மாவட்டத்தில் மிக உயர மான 5 1/2 அடி உயரமான சிலை ஆகும். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குக நாதீஸ்வரருக்கு அன்னாபி ஷேகம் நடை பெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி யான இன்று இந்த கோவிலில் உள்ள மூலவரான குகநாதீஸ்வ ரருக்கு அன்னா பிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலையில் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து தீபாராதனையும்நடந்தது.
பின்னர்எண்ணை,பால்,பன்னீர்,இளநீர்,தயிர்,தேன் சந்தனம்,விபூதி,பஞ்சாமிர்தம்மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் மூலவரான குகநாதீஸ்வரருக்கு100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அன்னாபி ஷேகம் நடந்தது.
மதியம் 12 அலங்கார சோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.