கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் குறைபாடுகளை தீர்க்க திரண்டனர்
- குமரி மாவட்டத்திலும் தகுதியானவர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த னர். சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பலரது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
நாகர்கோவில் : தமிழகம் முழுவதும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன மூலம் குடும்ப அட்டைதாரர் களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் தகுதியானவர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் விண்ணப்பித்திருந்தனர். சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பலரது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான நபர்களுக்கு மாதம் தோறும் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. விடுபட்ட நபர்கள் விண்ணப் பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட் டது.
இதை தொடர்ந்து இ-சேவை மையங்கள் மற்றும் கலெக்டர் அலுவல கம், தாலுகா அலுவல கங்களில் பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கினார்கள். ஏற்கனவே விண்ணப்பம் வழங்கப்பட்டு முறையான வங்கி கணக்கு உள்பட ஆவணங்கள் இணைக்கப்படாத ஒரு சிலரின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பபடிவங்களில் குறைகளை நிவர்த்தி செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் ஏராளமானோர் இன்று குவிந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று கலைஞர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை மேற்கொண்டனர். விண்ணப்பங்களில் வங்கி கணக்கு இணைக்கப்பட்டது. தற்போது இணைக்கப்பட்டு வரும் நபர்களுக்கு விரை வில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மாதம் தோறும் 1000 வழங்கப்பட்டு வந்த சிலருக்கு 2-வது மாதம் பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.