மார்த்தாண்டம் அருகே போக்குவரத்து ஊழியர் மீது தாக்குதல் - கொலை மிரட்டல்
- 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை
- காயமடைந்தவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இலவுவிளை பேழங்காட்டுவிளையை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த எழில் என்பவருக்கு நிதி நிறுவனம் மூலம் இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் எழில் முறையாக பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஏன் பணம் செலுத்தவில்லை என ஸ்டாலின் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எழில் விறகு கட்டையால் ஸ்டாலினை தாக்க பாய்ந்துள்ளார். அப்போது ஸ்டாலின் தந்தை ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் செல்வராஜ் (70) தடுக்க முயற்சித்துள்ளார்.ஆனால் எழில் ஆத்திரத்தில் செல்வராைஜ சரமாரியாக தாக்கி தலை மற்றும் கையில் காயம் ஏற்படுத்தி உள்ளார்.மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
காயமடைந்த செல்வ ராஜை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்துள்ள னர். செல்வராஜ் மனைவி ரோஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தா ண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல செல்வ ராஜின் மூத்த மகன் சுனில் குமார் தந்தை செல்வராஜை தாக்கியது குறித்து ஏழிலின் வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டு கையிலிருந்த இரும்பு கம்பியால் வீட்டிலிருந்த டெலிவிஷன், பிரிட்ஜ் மற்றும் ஜன்னலை அடித்து உடைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.