உள்ளூர் செய்திகள்

ஏ.வி.எம். கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

Published On 2023-02-09 09:48 GMT   |   Update On 2023-02-09 09:48 GMT
  • மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும்
  • கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் நிலத்திற் குள் புகுவதை தடுத்து, மண் வளம் பெறவும் உதவும்

நாகர்கோவில் :

மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனாவாலை டெல்லியில் அவரது அலுவலகத்தில் விஜய்வசந்த் எம்.பி. சந்தித்தார்.

அப்போது, 19-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மகாராஜாவால் திருவ னந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக ஏ.வி.எம். கால்வாய் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பணி பாதியில் நிறுத்தப்ப ட்டது.

தற்போது அந்த கால்வாய் அரை குறையாக காணப்படுகிறது. இந்த கால்வாய் பணியை மத்திய அரசு ஏற்றெடுத்து முடித்தால், மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும். இதனால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இயலும்.

திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி என்பதை பிற்காலத்தில் கேரள மாநிலம் கொல்லம் வரையிலும், தமிழ்நாட் டின் தூத்துக்குடி வரை யில் நீட்டிக்க முடியும். மேலும், இந்த கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உய ர்ந்து கடல் நீர் நிலத்திற் குள் புகுவதை தடுத்து, மண் வளம் பெறவும் உதவும். மேலும், கன்னியா குமரி சுற்றுலாவை மேம்படுத்த முடியும்.

எனவே ஏ.வி.எம்., கால் வாயை சீரமைக்க தேவை யான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

Tags:    

Similar News