உள்ளூர் செய்திகள்

பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் உடமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த காட்சி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2022-11-18 08:00 GMT   |   Update On 2022-11-18 08:00 GMT
  • "மெட்டல் டிடெக்டர்" சோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுமதி
  • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் பக்தர்களின் தரிச னத்துக்காக தினமும் அதிகாலை 4.30மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதையடுத்து கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 1 மணிக்கும், இரவு 9 மணிக்கும் நடை அடைக்கப்படுகிறது.

நேற்று முதலே பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.இதனால் பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்"சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் திருப்பதி வெங்கடேஸ்வரபெருமாள், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, மண்டைக்காடு பகவதி அம்மன் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில்சென்று பார்ப்பதற்காக படகு துறையில் அய்யப்ப பக்தர் களின் கூட்டம் அலைமோதுகிறது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News