உள்ளூர் செய்திகள்

யானையை 50 அடி உயரத்தில் இருந்து ஆபத்தான முறையில் படிக்கட்டு வழியாக இறக்கிய பாகன்

Published On 2022-10-02 07:24 GMT   |   Update On 2022-10-02 07:24 GMT
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விழாவுக்கு வந்தபோது நடந்தது
  • செல்போனில் வைரலாக பரவும் காட்சியால் பரபரப்பு

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக் குரிய புனித நீர் விவேகா னந்த புரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில்இருந்து எடுத்து வரப்படுகிறது.

புனித நீர் வெள்ளிக்கு டத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப் பட்டம்அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நவ ராத்திரி திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானை, இரவு நேரத்தில் கன்னியாகுமரி பார்க்வியூ பஜாரில் உள்ள கடைவீதி வழியாக கோவிலுக்கு அழைத்து வரப்படும் போது 50 அடி உயரத்தில் இருந்து குறுகிய படிக்கட்டு வழியாக பாகனால் இறக் கப்படும் காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைர லாக பரவி கொண்டி ருக்கிறது.

இந்த திகில் காட்சி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News