சிறுத்தை புலி தாக்கியதில் காயம் அடைந்த தொழிலாளிக்கு பாரதிய ஜனதாவினர் ஆறுதல்
- மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி
- சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.
கன்னியாகுமரி ;
குலசேகரம் அருகே உள்ள மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது ரப்பர் தோட்டத்திற்கு சிவக்குமார் நேற்று காலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் திடீரென வந்த சிறுத்தை புலி அவரை தாக்கியது. இதனால் சிவக்குமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவக்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சியின் 50-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், முன்னாள் ராணுவ வீரருமான அய்யப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜெகநாதன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் சுபாஷ் மற்றும் குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சென்று சிவக்குமாரை சந்தித்து சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.