- தி.மு.க. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு
- தமிழக கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் அண்ணா விளை யாட்டு அரங்கம் முன்பு நடந்தது. வடக்கு பகுதி செயலாளர் ஜவகர் வர வேற்று பேசினார்.
குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று பேசியபோது, "முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒழுக்கம், நன்னடத்தை உடையவர். எனவே அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி. தலைவ ராக பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பினார். தகுதியானவரை தகுதி யுள்ள பதவிக்கு பரிந்துரை செய்வது தி.மு.க.வின் வழக்கம்.
ஆனால் கவர்னர் அதை நிராகரித்து உள்ளார். எங்கோ இருந்து வந்த அவர், தமிழ் கலாசாரம் மற்றும் திராவிடம் பற்றி தெரியாத அவர் அனைத் துக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். அதை முறிய டிக்க வேண்டும். நல்லது செய்ய இடையூறாக இருக்கும் கவர்னரை மாற்ற வேண்டும். ஆனால் அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அவர் முட்டு கட்டை போட்டால் தான் அவரை அமித்ஷா ஏற்றுக் கொள்வார். அண்ணாமலை சென்றது நடைபயணம் இல்லை. சொகுசு நடை பயணம்" என்றார்.
கூட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியதாவது:-
கலைஞர் என்பது வெறும் பெயர் அல்ல. சந்தன தமிழின் சிந்தனை ஊற்று. கலைஞர் பட்டம் பெறவில்லை. ஆனால் தலைமை தாங்கினார். 60 ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமம் யாரும் இல்லை. ஆனால் அவருக்கு சமமானவரை நிலைநிறுத்த பாசிஸ்டுகள் திட்டம் போட்டுள்ளனர். அதற்காக தான் நடை பயணம் நடக்கிறது. நடைபயணத்துக்கு சொகுசு காரில் வருகிறார். அவதூறு களை அள்ளி வீசுகிறார். கை அசைக்க யாரும் இல்லை என்றாலும் கை அசைக்கிறார். திட்டம் போடுபவர்களிடம் இருந்து மு.க.ஸ்டாலினை மீட்க வேண்டும் என்பது இல்லை. தமிழகத்தை மீட்க வேண்டும்.
மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சமம் இல்லை. ஆனால் சமமாக இருக்க அவர் துடிக்கிறார். மதுரையில் மாநாடு போட்டார்கள். மாநாட்டில் தீர்மானம் போட்டது வேறு. ஆனால் மாநாட்டின் நோக்கம் என்ன? மாநாடு நடந்த அன்று மதுரையில் மதுபானங்கள் விற்று தீர்ந்தன. சிவகங்கை மாவட்டத்திலும் கோடிக் கணக்கில் மது விற்பனை நடந்துள்ளது. கலைஞர் காலத்தில் செய்ய முடியாததை எல்லாம் செய்ய முடியும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முழு மதிப்பெண்ணுக்கு கூடுதலாக 1 மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆக முடியாத நிலை உள்ளது. தி.மு.க.வை விமர்சித்தால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். தி.மு.கவை அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைக்கி றார்கள். அதற்கான நாடகம் தான் நடைபயணம். கர்நாடகாவில் பா.ஜனதா வால் வெற்றி பெற முடி வில்லை. பணத்தை அள்ளி வீசிய நிலையிலும் சிவ குமார் வெற்றி பெற்றார்.
பிரதமர் ரோடு ஷோ நடத்தி இருக்கிறார். ஆனாலும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரே மொழி ஒரே நாடு என்று இந்தி யாவினுடைய அரசியல் அமைப்பு சட்டத்தை கிழித்து நொறுக்கி இந்த நாட்டின் அதிபராக வேண்டும் என்று மோடி ஆசைப்படுகிறார். தமிழக ஆளுநர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்து கிறார். அதிகார துஷ்பிர யோகம் செய்கிறார். நீட்டுக்கு விதிவிலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு தீர்மானத்தில் கையெழுத்து போட முடியாதால் தந்தையும் மகனும் இறந்து போனார்கள். மணிப்பூரில் திட்டமிட்டு இனப்படு கொலை நடத்தப்பட்டுள்ளது
9 ஆண்டு பாரதிய ஜனதாவின் மத்திய ஆட்சியில் ரூ. 7.50 கோடி ஊழல் நடந்துள்ளது. செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை 17 மணி நேரம் விசாரிக்க என்ன இருக்கிறது. பா.ஜனதா கட்சி இனி ஆட்சிக்கு வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் பசலி யான், தில்லை செல்வம், தாமரை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.