கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி
- பணம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்கள் குவிந்தன
- உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறு வதற்காக வேண்டி கோவி லில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளி நாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம்.
இதற்காக இந்த கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி திறந்து எண்ணப் பட்டது. அதன்பி றகு கடந்த 40 நாட்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 40 நாட்களுக்கு பிறகு கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்ப ட்டன. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலையில் உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டது.