உள்ளூர் செய்திகள்

விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் கடலுக்கு செல்கிறார்கள்

Published On 2023-07-31 06:52 GMT   |   Update On 2023-07-31 06:52 GMT
  • குமரி மேற்கு கடற்கரையில் தடைக்காலம் நிறைவடைகிறது
  • 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

கன்னியாகுமரி :

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக குமரி மாவட்ட கடல் பகுதியில் ஆண்டுக்கு 2 முறை மின்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதிமுதல் ஜூன் 15-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

இந்த காலங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். அதன்படி மேற்கு கடற்கரை பகுதியில் விதிக்கப்படடிருந்த தடை இன்று நள்ளிரவுடன் முடிகிறது. கடந்த 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இன்றுடன் தடை நீங்குவதால் அவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். கடலுக்கு செல்வதற்கு தங்களின் படகுகளை பழுதுநீக்கி, புதுப்பித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். அவர்கள் நள்ளிரவுக்கு பிறகு கடலுக்கு செல்ல உள்ளனர்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு களுக்கு உதவி பங்குத்தந்தை ஷாஜன் பிரார்த்தனை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் செய்திருந்தது.

குளச்சல் மீன் பிடித்துறை முகத்தில் விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் வடநாட்டு தொழிலாளர்கள் ஏராள மானோர் ஈடுபட்டு உள்ளனர். 60 நாட்கள் தடையையொட்டி, அவர்கள் தங்களின் ஊருக்கு சென்றிருந்தனர்.

இன்று நள்ளிரவு முதல் தடை நீங்குவதால் தங்களின் சொந்த ஊருக்கு சென்றி ருந்த வடமாநில தொழி லாளர்கள் கடந்த 3 நாட்க ளாக குளச்சல் திரும்பிய வண்ணம் இருந்தனர்.

Tags:    

Similar News