உள்ளூர் செய்திகள்

ஒழுகினசேரியில் இன்று பரபரப்பு - நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்

Published On 2023-05-03 06:33 GMT   |   Update On 2023-05-03 06:33 GMT
  • கடுமையான போக்குவரத்து நெருக்கடி
  • நீண்ட வரிசையில் நின்ற பஸ்களை மாற்று பாதை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

நாகர்கோவில்

ஆரல்வாய் மொழியில் இருந்து வடசேரிக்கு இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ஒழுகினசேரி பாலத்தை கடந்து பஸ் வந்தபோது திடீரென பஸ் பஞ்சராகி நடுவழியில் நின்றது.

இதையடுத்து டிரைவர் பஸ்ஸை இயக்க முயன்றார்.ஆனால்பஸ்சை எடுக்க முடியவில்லை. பஸ் நடுவழியில் நின்றதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நெல்லை யிலிருந்து வந்த பஸ்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதேபோல் ஒழுகினசேரியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளா னார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கித் தவித்தனர். அரசு அலுவலகங்களுக்கு வந்தவர்களும் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். பஸ் பழுதானது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அவர்கள் அங்கு விரைந்து வந்தனர் .

மேலும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட வரிசையில் நின்ற பஸ்களை மாற்று பாதை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெல்லைக்கு சென்ற பஸ்கள் வடசேரி அண்ணா சிலையிலிருந்து புத்தேரி பாலம், நான்கு வழி சாலை வழியாக அப்டா மார்க்கெட் சென்றது.

போக்குவரத்து போலீ சார் வடசேரி பகுதி யில் நின்று பஸ்களை திருப்பி விட்டனர். நெல்லை யிலிருந்து வந்த பஸ்கள் வழக்கமான பாதையில் இயக்கப்பட்டது. பழுதாகி நின்ற பஸ் மற்றும் அப்பா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.சுமார் மூன்று மணி நேரமாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடுவழியில் பழுதாகி நின்ற பஸ் சரி செய்யப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News