உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆகம விதிப்படி ராஜகோபுரம் கட்டலாமா?

Published On 2023-09-12 08:39 GMT   |   Update On 2023-09-12 08:39 GMT
17-ந்தேதி கேரளா நம்பூதிரிகளை வரவழைத்து தேவபிரசன்னம் பார்க்க ஏற்பாடு

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக் காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம் அதேபோல மாலை 4 மணிக்கு திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பெருந்திருவிழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தைஅமாவாசை, திருக்கார்த் திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியைமீண்டும் தொடங்கஇந்துஅறநிலைய த்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

இதற்கிடையில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலைய துறைஅமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அஸ்தி வரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க லாமா? என்பது குறித்து வருகிற 17-ந்தேதி கேரளா வில் இருந்து நம்பூதிரிகளை வரவழைத்து தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கானஏற்பாடுகளை குமரிமாவட்டதிருக்கோவில்களின் இணைஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழுதலைவர் பிரபாராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ் வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News