மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் - தே.மு.தி.க.வினர் 600 பேர் மீது வழக்கு
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழக முழுவதும் நேற்று காங்கிரசார் மறியல் போராட்டம்
- சாலையை சீரமைக்க கோரி தே.மு.தி.க.வினர் போராட்டம்
நாகர்கோவில்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழக முழுவதும் நேற்று காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்திலும் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள இந்தியன் வங்கி முன்பு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி பகுதியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கே.டி. உதயம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்ட 225 பேரை போலீசார் கைது செய்தனர் கைது செய்யப்பட்டவர்கள் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குழித்துறை சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண் டனர். போராட்டத் தில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குழித்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரசார் போராட்டத் தில் ஈடுபட்டபோது அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க கோரி தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தே.மு. தி.க.வினர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய் துள்ளனர். மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் மற்றும் தே.மு.தி.க.வினர் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.