உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட கடத்தல் கும்பல் கேரள போலீசாரிடம் ஒப்படைப்பு

Published On 2023-07-29 07:35 GMT   |   Update On 2023-07-29 07:35 GMT
  • திருட்டு புகாரில் தலைமறைவானவர் என தகவல்
  • குளச்சல் வாலிபரை காரில் தூக்கிச் சென்ற விவகாரம்

கன்னியாகுமரி :

குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு பகுதி பரபரப்பாக காணப்பட்ட இரவு 7 மணியளவில் காரிலிருந்து இறங்கிய கும்பல் ஒரு வாலிபரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றது. கடத்தப்பட்ட வாலிபர் போட்ட சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், நடப்பது என்ன என்று யோசிப்பதற்குள் அந்தக் கார் அங்கிருந்து மாயமாய் மறைந்து விட்டது. இந்த சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவ ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். கடத்த லுக்கு பயன்படுத்திய கார் கேரள மாநில பதிவு எண்ணை கொண்டது என போலீசாரிடம் தெரிவித்த னர்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் சோதனைச்சா வடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதன்பயனாக புதுக்கடை பகுதியில் அந்த கார் சிக்கியது. கடத்தப்பட்ட வாலிபரையும் அவரை கடத்திய கும்பலையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று கருங்கல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை விசாரணை நடத்தினார்.

இதில் கடத்தப்பட்ட வாலிபர், குளச்சல் துறை முகத் தெருவை சேர்ந்தவர் என்பதும், அவர், கேரளா வில் விசைப்படகிலிருந்து ₹.40 ஆயிரம், ஜி.பி.எஸ். மற்றும் ஓயர்லஸ் கருவிகளை திருடிவிட்டு குளச்சல் தப்பி வந்தவர் என்றும் தெரிய வந்தது. இது குறித்து கேரள விசைப்படகினர் பள்ளித் தோட்டம் ேபாலீஸ் நிலை யத்தில் புகார் செய்தனர்.ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதனால் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வாலிபரை பிடித்து பள்ளித்தோட்டம் போலீசில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் குளச்சல் வந்து வாலிபரை காரில் கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து பள்ளித்தோட்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. அவர்கள் கருங்கல் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது திருட்டு வழக்கு உண்மை தான் என கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடத்தல் கும்பலையும் கடத்தப்பட்ட வாலிபரையும் கருங்கல் போலீசார், கேரள போலீ சாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் விசாரணைக்காக கேரளா அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News