மாணவன் படித்த பள்ளிக்கூடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை
- திராவகம் கலந்த குளிர்பானம் குடித்ததால் பலி
- பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு
நாகர்கோவில்:
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு மெதுகும்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சோபியா. இவர்களது மகன் அஸ்வின் (வயது 11).
இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அஸ்வினுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அஸ்வினை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய் யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின் திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்து இருப்பதால் சிறுநீரகம் செயல் இழந்திருப்பதாக கூறி னார்கள். இதைத்தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இதை யடுத்து அஸ்வினின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வந்த அஸ்வின் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு வரப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மூன்று டாக்டர்கள் கொண்ட குழு வினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய் யப்பட்டது. இதற்கு பிறகு அஸ்வினின் உடல் அவரது உறவினிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால் அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அஸ்வின் உடல் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக் கப்பட்டுள்ளது. அஸ்வின் மர்மமான முறையில் இறந்தது குறித்து களியாக்கா விளை போலீசார் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு மாற்றப்பட்டது.
நாகர் கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசார ணையை இன்று தொடங்கி யுள்ளனர். டி.எஸ்.பி. சங்கர், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை உட்பட அனைத்து தகவல்களையும் சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு நேரில் சென்று அவர்கள் இன்று விசாரணை மேற் கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரி யைகள் மாணவ-மாணவி களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் விசாரணை நடத்து கிறார்கள்.
இதைத் தொடர்ந்து மாணவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஆஸ்பத்திரி மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.மேலும் அஸ்வினின் பெற்றோரி டமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.