சென்னை-கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்
- மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் கோரிக்கை
- பிரதமர் தமது உரையில் 450 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
கன்னியாகுமரி :
மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் பிரதமர் மோடிக்கும், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் சென்னை செல்வதற்கு பேருந்துகளையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் பிரதமர் தமது உரையில் 450 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தார். தென் மாவட்ட மக்கள் குறிப்பாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்வதற்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களி லேயே 14 மணி நேரம் ஆகிறது. இதனால் அவர்களுடைய அதிகமான நேரத்தை பயணத்திற்கு செலவிட வேண்டி உள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத் தில் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வருவதும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு செல்வதும் இயலாத காரி யமாக இருந்து வருகிறது.
நாட்டில் பல இடங்களில் தற்போது மத்திய அரசு வந்தே பாரத் ரெயில்களை இயக்கி பொதுமக்களின் பயண நேரத்தை மிகவும் குறைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நெல்லையில் இருந்து இன்னும் கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை பணிகளும் முடிவடையாத சூழ்நிலையில் உள்ளது. எனவே தென் மாவட்ட மக்கள் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நலன் கருதி சென்னையி லிருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே மனுவை அவர், மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பி உள்ளார்.