உள்ளூர் செய்திகள்

இந்தோனேசியா சிறையில் மரணமடைந்த மீனவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்

Published On 2022-06-10 07:08 GMT   |   Update On 2022-06-10 07:08 GMT
  • அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மனு
  • இந்தோனேசியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மற்ற 3 - மீனவர்களையும் சிறையில் இருந்து மீட்டு உடனடியாக சொந்த ஊர் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி:


தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


கன்னியாகுமரி மாவ ட்டம், கிள்ளியூர் வட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரிய ஜெசிந்தாஸ் (33)-க்கு சொந்தமான விசைப்படகில், இவரும் தூத்தூர் மற்றும் கேரளாவை சேர்ந்த 7 - மீனவர்களும் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசியா கடற்படையினரால் மீன வர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 4 பேரை கடந்த மாதம் 28-ந்தேதி அந்த நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது. படகின் உரிமையாளர் மரிய ஜெசிந்தாஸ் உட்பட 4 -பேரும் இந்தோனேசியா சிறையில் இருந்து வந்தனர்.


இந்நிலையில் கடந்த 10 -ம் தேதி மரிய ஜெசிந்தாஸ்க்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையில் மயங்கி விழுந்தார். உடனே அங்குள்ள காவலர்கள் மீனவர் சுயநினைவு இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 20-ந்தேதி உயிரிழந்தார்.

இதனால் இவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.எனவே இந்தோனேசியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உயிரிழந்த மரிய ஜெசின் தாஸ் அவர்களுடைய குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும் இந்தோனேசியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மற்ற 3 - மீனவர்களையும் சிறையில் இருந்து மீட்டு உடனடியாக சொந்த ஊர் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

கோரிக்கை மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News