கான்செப்ட்.....சரக்கு பார்ட்டி.....ஜாயிண்ட் விவகாரம்
- 3 வாலிபர்கள்-3 மாணவிகள் சிக்கினர்
- போலீசார் விசாரணை தீவிரம்
நாகர்கோவில்:
மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி வரும் இளம்பெண்கள், இளைஞர்கள் சமீபகாலமாக எல்லை மீறி வருகின்றனர். இது கலாசார சீரழிவாக மாறி நிற்பது தான் வேதனையான ஒன்று. இப்படி ஒரு கலாசார சீரழிவு தான் குமரி மாவட்டத்தில் நடந்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குளச்சலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி தனது பிறந்த நாளை சக தோழர்களுடன் கொண்டா டிய போது, அங்கு வந்த பள்ளி தோழன் பிறந்த நாள் கொண்டாடிய மாணவியை தாக்கி உள்ளார்.
இது தொடர்பாக வந்த புகாரை போலீசார் விசாரித்த போது, கிணறு வெட்ட பூதம் பிறந்த கதையாக ஒருவருக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை மறந்து இளம்பெண்களும், இளைஞர்களும் மதுபான விருந்து, உல்லாசம் என ஒரு வீட்டில் அடிக்கடி கூடி கும்மாளமிட்டது தெரிய வந்தது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஒரு மாணவியின் கண்ணீர் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆடியோவில் பேசிய மாணவி, 2 தோழிகளின் அழைப்பால் விருந்து ஒன்றுக்குச் சென்றேன். ஆனால் அங்கு சில இளைஞர்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இருப்பினும் விருந்தில் பங்கேற்றேன்.
அது மது விருந்து மட்டும் தான் என்று நினைத்தேன். ஆனால் நேரம் செல்லச் செல்ல உல்லாச விருந்தாக மாறியது. இதில் நானும் என்னை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் தோழிகளை சந்திப்பதை தவிர்த்தேன். ஆனால் அவர்கள் அடிக்கடி பார்ட்டியில் சந்தித்துள்ளனர்.
இது தொடர்பாக செல்போனில், கான்செப்ட்... சரக்கு பார்ட்டி...ஜாயிண்ட் என குறுந்தகவல்அனுப்பினர். என்னையும் பார்ட்டியில் கலந்து கொள்ளும் படி வற்புறுத்தினர். தற்போது என்னை அதில் சிக்க வைத்து விட்டு அவர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர் என கண்ணீருடன் பேசி இருந்தார்.
இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தவின் பேரில் தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர். முதலில் பிறந்த நாள் விருந்து நடந்ததாக கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தனர்.
அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மது பாட்டில்கள், ஆணுறைகள், கிழிந்த உடைகள் உள்ளிட்ட பல விரும்பத்தகாத பொருட்கள் கிடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே போலீசார் தங்கள் விசாரணை முறையை மாற்றினர்.
அப்போது காதல் என்ற பெயரில் தோழிகளை விருந்துக்கு அழைக்கும் வாலிபர்கள், பின்னர் தங்கள் இஷ்டத்திற்கு அவர்களை மயக்கி உல்லாசத்திற்கு பயன்படுத்தி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த வலையில் விழுந்த மாணவி கள், இளம்பெண்கள் அதன்பிறகு வேறு வழியின்றி விபரீதம் உணராமல் விருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் படுக்கை விருந்தில் பங்கேற்ற 3 வாலிபர்கள் மற்றும் 3 இளம்பெண்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அவர்கள் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர்.
பெண்களின் நிலை கருதி போலீசார் தொடர்ந்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விருந்துக்கு தெரியாமல் சென்ற இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து வாலிபர்கள் மிரட்டி இருக்கலாம். அதனால் பயந்து போன பெண்கள், அடிக்கடி விருந்துக்குச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசா ருக்கு உள்ளது. அதன் அடிப்ப டையிலும் போலீசார் தங்கள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கான்செப்ட்... சரக்கு பார்ட்டி...ஜாயிண்ட் விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலாசாரம் பெரும் நகரங்களில் நடப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் கடை ேகாடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகளின் பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டி இருப்பது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.