உள்ளூர் செய்திகள்

வாவறை ஊராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் 3 சாலைகள் அமைப்பு

Published On 2022-10-01 07:56 GMT   |   Update On 2022-10-01 07:56 GMT
  • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி:

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாவறை ஊராட்சியில் உள்ள பொட்டக்குளம் முதல் இடஞ்சை வழி பாறப்பாட்டு விளை செல்லும் சாலை, தும்மங்கோடு முதல் மூலவிளை செல்லும் சாலை, புல்லுவிளாகம் முதல் மணிலி பள்ளிக்கல் சாலையில் ஆதார் ஜாண் வீடு முதல் ஜாண்சன் வீடு வரையும் உள்ள மூன்று சாலைகளும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. இந்த மூன்று சாலைகளையும் சீரமைக்க பொட்டக்குளம் - இடஞ்சை வழி பாற்பாட்டு விளை சாலைக்கு ரூ.5 லட்சமும், தும்மங்கோடு முதல் மூலவிளை சாலை பக்கசுவர் அமைத்து காங்கிரீட் சாலை அமைக்க ரூ.3 லட்சமும், புல்லு விளாகம் முதல் மணலி பள்ளிக்கல் சாலையில் ஆதார் ஜாண் வீடு முதல் ஜாண்சன் வீடு வரை காங்கிரீட் சாலை அமைக்க ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் முடிவடந்ததையெடுத்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ மூன்று சாலைகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வாவறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னப்பர், முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் கிறிஸ்டோபர், கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News