பாலமோர் ஊராட்சி பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
- தலைவர் லில்லி பாய் சாந்தப்பன் தொடங்கி வைத்தார்
- சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது
திருவட்டார் :
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலமோர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கைகாட்டி பிருந்தாவனம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்து உள்ளது. இதை சரிசெய்து தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் லில்லிபாய் சாந்தப்பனிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சாலையை சரிசெய்வதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டபோது இந்த சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. சாலையை சரி செய்ய தமிழக வனத்துறையை சார்ந்த முதன்மை தலைமை வனபாதுகாவலர் சீனிவாஸ் ஆர் ரெட்டியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை அவர் பரிசீலனை செய்து அனுமதி அளித்தார். இதையடுத்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் லில்லிபாய் சாந்தப்பன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏசுராஜ், ஊராட்சி மன்ற செயலர் சாமுவேல், கவுன்சிலர்கள் சந்திரா ஜெயசீலன், ராணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்