உள்ளூர் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை நீடிப்பு

Published On 2023-05-11 07:15 GMT   |   Update On 2023-05-11 07:15 GMT
  • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தின் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுருளோடு பகுதியிலும் கனமழை பெய்தது.

அங்கு அதிகபட்சமாக 55.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.20 அடியாக உள்ளது. அணைக்கு 235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது. அணைக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

Tags:    

Similar News