உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்திற்கு கேரளாவில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா

Published On 2022-06-22 07:13 GMT   |   Update On 2022-06-22 07:13 GMT
  • புதிதாக 40 பேர் கொரோனாவால் பாதிப்பு
  • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார்

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக திருவட்டார், முஞ்சிறை ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் கொரோனா சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 766 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார் கள். அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாவில் தலா ஒருவருக்கும், குருந்தன் கோடு ஒன்றியத்தில் 8 பேரும், மேல்புறத்தில் 6 பேரும், முஞ்சிறையில் 9 பேரும், திருவட்டாரில் 2 பேரும், தக்கலையில் 3 பேரும் கொரோனாவானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் மாநகர பகுதியிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருப்பினும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News