- மின் விளக்குகளை சுற்றி ஈசல்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன.
- வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது மாவட்டம் முழுவதும் பெய்து வருகிறது.
சில நாட்களாக இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் மின்விளக்குகள் எரிய விடும் நேரத்தில் அந்த மின் விளக்குகளை சுற்றி ஈசல்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன.
குறிப்பாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் பம்மம் முதல் குழித்துறை வரை ஈசல் கூட்டம் படையெடுத்து வந்து மார்தாண்டம் மேம்பாலம், தாமிரபரணி ஆற்றுப்பாலம், கடைகள், வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை ஆக்கிரமித்து கொண்டது.
இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஈசல் கூட்டம் காரணமாக வாகனங்களை ஓட்டமுடியாமல் நிலை தடுமாறினார்கள். பல கடைகளில் ஈசல் கூட்டத்திலிருந்து தப்பிக்க மின்விளக்குகளை அணைத்திருந்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது பரபரப்பான சூழல் காணப்பட்டது.