வாவுபலி பொருட்காட்சியில் குழந்தைகளுடன் குவிந்த மக்கள்
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று ஊரடங்கால் வாவுபலி பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது
- குழந்தைகளுடன் பலரும், நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை நகராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயி களின் விளை பொருட்களை கொண்டு பொருட்காட்சி நடத்தபடுவது வழக்கம்,
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று ஊரடங்கால் வாவுபலி பொருட்காட்சி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டிற்கான 97-வது வாவுபலி பொருட் காட்சி கடந்த 14 -ம் தேதி குழித்துறையில் நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி. மைதானத்தில் துவங்கின, தொடர்ந்து 20 -நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் தினமும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பார்வையாளகர்களை கவரும் ராட்டினங்கள், மரண கிணறு, என மக்கள் பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விவசாய விளை பொருட்கள் கண்காட்சி யும் அடங்கி உள்ளதால் தினமும் ஏராளமான தமிழக கேரள மக்கள் திரண்டு பார்வையிட்டு வருகின்றனர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் இந்த கூட்டம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக குழந்தைகளுடன் பலரும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.