குளச்சலில் கேரள முதலி சி.எஸ்.ஐ. முன்னேற்ற சங்க ஆண்டு விழா
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது
- நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர் ஜிஜோ ராஜேசிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
குளச்சல் :
கேரள முதலி சி.எஸ்.ஐ. முன்னேற்ற சங்க 32-வது ஆண்டு விழா குளச்சல் நெசவாளர் தெரு ஹாக்கர் புரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடந்தது. சபை ஊழியர் ஷெர்லின் சஜிதா நெல்சன் ஜெபம் செய்தார். சங்க தலைவர் ஜாண் மோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் குணசிங் வேதநாயகம் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் ராஜா வரவேற்றா.பொதுச்செயலாளர் பிரேம் ஆனந்த் ஆண்டறிக்கை வாசித்தார். செயல் மற்றும் கல்விக்குழு கன்வீனர் பெஞ்சமின் கல்விக்குழு அறிக்கை வாசித்தார். பேராய இளையோர் கரிசனைத்துறை இயக்குனர் ரெஞ்சித் சுதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். சிறப்பு விருந்தினரை முன்னாள் பொருளாளர் சுந்தர்ராஜ் அறிமுகப்படுத்தி பேசினார்.
விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற நாகர்கோவில் பல்கலைக்கழக இணை பொறியியல் கல்லூரி பேராசிரியர் அருண் பிரேம் சாந்த், பேராயத்தில் அருள் பொளிவு பெற்ற போதகர் சாமுவேல் ராஜன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களை பேராசிரியர் டாக்டர் புஷ்பராஜ், சங்க ஆலோசகர் மணி ஆகியோர் அறிமுகப்படுத்தி பேசினர்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர் ஜிஜோ ராஜேசிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் டேவிட் ஜோன்ஸ் நன்றி கூறினார். போதகர் ரெஞ்சித் சுதிர் நிறைவு ஜெபம் செய்தார். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் சபைக்குழுவினர் செய்திருந்தனர்.