உள்ளூர் செய்திகள்

குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து டிரான்ஸ்பார்மர் சேதம்

Published On 2023-11-09 06:58 GMT   |   Update On 2023-11-09 06:58 GMT
  • நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • நல்ல வேளையாக அவ்வழியாக யாரும் அப்போது செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

குழித்துறை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த காற்றுடன் சூறைக் காற்றும் வீசியது. இதையடுத்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்து பொதுப் பணித்துறை சுற்றுலா மாளிகை சாலையின் அருகில் நின்ற புளிய மரத்தின் கிளை முறிந்து மின்சார டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மர் உடைந்து பயங்கர சத்தத்துடன் விழுந்தது. நல்ல வேளையாக அவ்வழியாக யாரும் அப்போது செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News